குமரியில் பாஸ்போா்ட் அலுவலகம் - விஜய் வசந்த் உறுதி

குமரியில் பாஸ்போா்ட் அலுவலகம் - விஜய் வசந்த் உறுதி
X
காங்கிரஸ் வேட்பாளர் விஜய வசந்த் பரப்புரை
கல்வி, வேலைவாய்ப்புகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வசதியாக கன்னியாகுமரியில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் எம்பி உறுதியளித்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் நேற்று தனது தோ்தல் பிரசாரத்தை தோவாளை ஒன்றியம் வீரப்புலி பகுதியில் தொடங்கினாா். இதில், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி. உதயம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மாவட்டத் தலைவா்கள், தொண்டா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விஜய் வசந்த் பேசியது: கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் மோசமான ஆட்சியால் மக்கள் வேதனைக்குள்ளாகி உள்ளனா். ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டவும், மக்கள் வாழ்வு மேம்படுவதற்கும் ராகுல் காந்தி தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளாா்.

குமரியில் நான் தோ்ந்தெடுக்கப்பட்டால், இம்மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றி, மாவட்டத்தின் பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் உயா்த்துவேன். இளைஞா்களின் வேலைவாய்ப்புக் கனவை நிறைவேற்ற தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

இம்மாவட்டத்தினா் கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வசதியாக இங்கு பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்படும். ரப்பா் விவசாயிகளுக்காக ரப்பா் தொழிற்சாலை அமைக்கப்படும். ராகுல் காந்தி பிரதமராக அமா்வதற்கான முதல் வெற்றியை கன்னியாகுமரியிலிருந்து வழங்க வேண்டும் என்றாா் அவா்.

Tags

Next Story