மாற்றுத்திறனாகளிகள் பாதை சீரமைக்க கோரிக்கை

மாற்றுத்திறனாகளிகள் பாதை சீரமைக்க கோரிக்கை

கும்பகோணம் புதிய பஸ்நிலையத்தில், மாற்றுத்திறனாகளிகள் பஸ் ஏறும் சருக்கு சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கும்பகோணம் புதிய பஸ்நிலையத்தில், மாற்றுத்திறனாகளிகள் பஸ் ஏறும் சருக்கு சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம் புதிய பஸ்நிலையத்தில், மாற்றுத்திறனாகளிகள் பஸ் ஏறும் சருக்கு சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய பஸ் நிலையம் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் கும்பகோணம் மாநகரமானது காவிரி, அரசலாறு என்ற 2 ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைய உள்ளன. கும்பகோணத்தை சுற்றிலும் நவக்கிரக கோவில்கள், புராதன கோவில்கள், பாடல்பெற்ற கோவில்கள் உள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையும் உள்ளது. ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு ரெயில் போக்குவரத்தை போல் பஸ் போக்குவரத்தும் வசதியாக இருப்பதற்காக கும்பகோணத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இங்கிருந்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை சென்னை, திருப்பதி, பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடிப்படை வசதிகள் இதனால் கும்பகோணம் பஸ் நிலையத்தில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு பயணம் செய்பவர்களில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளின் வசிக்காக பஸ் நிலையத்தில் சில அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பஸ் ஏறி இறங்குவதற்கு வசதியாக தள்ளி நகற்றுவற்கு ஏற்ற வகையில் சருக்கு வடிவில் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இந்த சருக்கு மூலம் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் வந்தால் அதன் உதவி கொண்டு பஸ்களில் ஏறி இறங்க வசதியாக இருந்தது. இந்த சருக்கை எந்த இடத்திற்கு தள்ளி செல்லும் வகையில் அமைக்கப்பட்டதால் பஸ் நிலையம் முழுவதும் இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சருக்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் உள்ளது. மேலும் உரிய பராமரிப்பு இல்லாத நிலையில் இதனால் அவை துருப்பிடித்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்த முடியாததால் மாற்றுத்திறனாளிகள் பஸ் ஏறி இறங்குவதற்கு பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட சருக்குகளை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டில் விடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story