குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சார்பதிவாளர் அலுவலக சாலை
குண்டும் குழியுமான சாலை
மல்லசமுத்திரம் அருகே சூரியகவுண்டம்பாளையத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மல்லசமுத்திரம் அருகேயுள்ள, சூரியகவுண்டம்பாளையத்தில் தற்காலிகமாக செயல்படும் சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை சுமார் ஒருகிலோ மீட்டர் தொலைவிற்கு ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இவ்வழியாக தினமும் கணக்கில் அடங்காத அளவிற்கு எண்ணற்ற டிப்பர் லாரிகள், தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என எந்நேரமும் சென்ற வண்ணம் உள்ளது. எனவே, சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் மக்கள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு செல்கின்றனர். தற்சமயம், மழைக்காலம் என்பதால் சாலையில் அதிகளவில் மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதனால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, சாலையை சரிசெய்ய சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.