கிராம தேவதை பத்திரகாளியம்மன் வீதி உலா

கிராம தேவதை பத்திரகாளியம்மன் வீதி உலா

கிராம தேவதை பத்திரகாளியம்மன் வீதி உலா

தூத்துக்குடியில் கிராம தேவதை என அழைக்கப்படும் பத்திரகாளியம்மன் ஆலய தை மாத திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா பக்தர்கள் தரிசனம்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பழமையான கிராம தேவதை என அழைக்கப்படும் பத்திரகாளியம்மன் ஆலய தை மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வகையில் அம்மன் வீதி உலா இன்று நடைபெற்றது. இதில் பலவித வண்ண மலர்கள் மற்றும் பச்சை நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பத்திரகாளி அம்மன் பித்தளை சப்பரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்று அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைச்சர் கீதா ஜீவன் வழிகாட்டுதலின்படி திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல் ,கோவில் அறங்காவலர், குழு உறுப்பினர்கள் மஞ்சுளா இளங்கோவன், மோகன்ராஜ், போத்தீஸ் ராமசாமி, சோமு, மாரிமுத்து, மணி, மாரீஸ்வரன், ஆனந்த்ராஜ், சுப்பையா, உலகநாதன், மணிவண்ணன், பொன்ராஜ், தாயப்பன், உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story