பத்ரகாளியம்மன் கோயில் தீர்த்தக்குட ஊர்வலம்

பத்ரகாளியம்மன்  கோயில் தீர்த்தக்குட ஊர்வலம்
X
தீர்த்த குட ஊர்வலம் 
குமாரபாளையத்தில் காவேரி நகர் ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில், பரிவார தெய்வங்கள் பஞ்ச சக்தி, கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் காவேரி நகர் ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில், பரிவார தெய்வங்கள் பஞ்ச சக்தி, கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. குமாரபாளையம் காவேரி நகர் ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில், பரிவார தெய்வங்கள் பஞ்ச சக்தி, கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா மார்ச் 21 கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

நேற்று காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில் யானை, குதிரைகளுடன், பக்தர்கள் பல தெய்வங்கள் வேடமிட்டு பங்கேற்றனர். கணபதி யாக பூஜை, புண்யாக வாசனம் உள்ளிட்ட முதல் கட்ட, இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட யாகசாலை பூஜைகள் நடந்தன.

இன்று காலைநான்காம் கட்ட யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு,காலை 09:00 மணியளவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. யாகசாலை பூஜைகளை ஈரோடு ஆதீனம் பாலாஜிசிவம் மற்றும் அவரது குழுவினர்கள் யாகசாலை பூஜைகளை நடத்தி வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story