மேட்டூர்: செல்போன் லைட் மூலம் நோயாளிக்கு சிகிச்சை.

மேட்டூர்: செல்போன் லைட் மூலம் நோயாளிக்கு சிகிச்சை.

செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை

சேலம் மாவட்டம் ,மேட்டூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவருக்கு செல்போன் லைட் மூலம் சிகிச்சை அளித்த அவலம் அரங்கேறியுள்ளது.

மேட்டூர் அருகே உள்ள வாச்சம்பள்ளியில் இன்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காயம் அடைந்த கோபி மற்றும் வேளாங்கண்ணி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததன் காரணமாக அரசு மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டது. மின்விளக்கு இல்லாத காரணத்தால் விபத்தில் சிக்கியவர்களுக்கு செல்போன் விளக்கு வெளிச்சத்தின் மூலம் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செல்போன் விளக்கு வெளிச்சம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் நோயாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story