அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதியின்றி நோயாளிகள் தவிப்பு

அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதியின்றி நோயாளிகள் தவிப்பு

 திருப்புவனம் அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதியின்றி நோயாளிகள் தவித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதியின்றி நோயாளிகள் தவித்து வருவதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் குடிநீர் இல்லாததால் நோயாளிகள், உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

திருப்புவனம் அரசு மருத்துவமனையை நம்பி லாடனேந்தல், தட்டான்குளம், அல்லிநகரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளனர். இதுதவிர நான்கு வழிச்சாலையில் நடைபெறும் விபத்துகளில் சிக்கி காயமடைபவர்கள் முதல் உதவி சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவார்கள். மருத்துவமனை வளாகத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்தப்பட்டு நோயாளிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் பழுது காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பாடின்றி உள்ளது. உள்நோயாளிகளாக தங்குபவர்கள், உறவினர்கள் வெளியில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தினசரி திருப்புவனம் அரசு மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சுத்திகரிப்பு இயந்திரம் பராமரிப்பு இன்றி காட்சிப்பொருளாக இருப்பது நோயாளிகளை வேதனையடைய செய்துள்ளது.

Tags

Next Story