பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா -நீதிபதி பங்கேற்பு

பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல்கனி கலந்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 35 ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .பள்ளி செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். பள்ளி மாணவி ஐஸ்வர்யா பள்ளி மாணவர் சரத் ஆகியோர் வரவேற்று பேசினர் அறக்கட்டளை தலைமைச் செயலாளர் கலியமூர்த்தி நிர்வாக செயலாளர் கைலாசம் நிதி செயலாளர் பொம்மி துணை முதல்வர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் தீபக் ஆண்டு அறிக்கை வாசித்தார் .

விழாவில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ அப்துல் கனி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் தஞ்சாவூர் சைத்தன்யா டெக்னோ பள்ளி கணித ஆசிரியர் எம் அனிதா அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, இளவரசி ,செல்வராஜ், ஆனந்தகுமார்,ரசியா,அண்ணாதுரை பெற்றோர்கள் சார்பில் அறிவழகன் வில்பர்ட்ராஜா அதியமான் பிரபாகரன் சுல்தான் பாட்ஷா விஜயலட்சுமி மைதிலி சங்கீதா மதுவினோலியா பாத்திமா ஆகிய கலந்து கொண்டு பேசினார்கள் பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் லதா ஜெயசுதா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள் முடிவில் பிளஸ் 1 மாணவர் விக்னேஷ் பிளஸ் 1 மாணவி சுவேதா ஆகியோர் நன்றி கூறினார்கள்.

Tags

Next Story