பட்டுக்கோட்டை : புதிய வருவாய் கோட்டாட்சியர் பதவியேற்பு

பட்டுக்கோட்டை : புதிய வருவாய் கோட்டாட்சியர் பதவியேற்பு
வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணிமாறுதல் செய்யப்பட்ட ஜெயஸ்ரீ பொறுப்பேற்று கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை புதிய வருவாய் கோட்டாட்சியராக ஜெயஸ்ரீ பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை ஆட்சியர் பயிற்சி முடித்து, தற்போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் இங்கு வருவாய் கோட்டாட்சியராக இருந்த அக்பர் அலி, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியராக பணி மாறுதலில் சென்று உள்ளார். பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்டு, சட்டத்திற்குட்பட்டு அவற்றுக்கு தீர்வு காணப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story