நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில், நாமக்கல் நாமக்கல் மணிக்கூண்டு அருகில் பாவேந்தர் பாரதிதாசனின் 134 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. பாரதிதாசன் இலக்கிய பேரவை தலைவர் புலவர் கருப்பண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேலு விழாவில் கலந்துகொண்டு, பாரதிதாசனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு,பாரதிதாசன் கவிதைகள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கியமான இடம் வகிக்கும் ஒரு சிறந்த கவிஞர். அவர் தனது கவிதைகள் மூலம் சமூக சீர்திருத்தம், பெண்ணுரிமை, தேசியவாதம் போன்ற பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.பாவேந்தர் பாரதிதாசனின் 134வது பிறந்தநாள் விழா நாமக்கல்லில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழா மூலம் பாவேந்தரின் புகழுக்கு மேலும் வலிமை சேர்த்தது. பாவேந்தர் பாரதிதாசன் பேரவை செயலாளர் ரகோத்தமன், பொருளாளர் ஆறுமுகம், பேராசிரியர் அரசுபரமேஸ்வரன், பசுமை தில்லை சிவக்குமார், டால்பின் பாலு, நாச்சிமுத்து, புலவர்கள் பெரியசாமி, துரைபாண்டியன், மாணிக்கம், தங்கவேல் மற்றும் பெரியசாமி, ஜெயச்சந்திரன், பாலகிருஷ்ணன், முத்துசாமி, சண்முகம் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.