வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் பாயாசத்தில் விஷம் - சிறுமி பலி

வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் பாயாசத்தில் விஷம் - சிறுமி பலி

வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் பாயாசத்தில் விஷம் - சிறுமி பலி

வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் பாயாசத்தில் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி செய்ததில் 11 வயது சிறுமி,பலியான வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தேனி மாவட்டம் போடி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த ராம்குமார், செல்வி தம்பதியர் சௌந்தர்யா என்ற பெண் குழந்தையும் கிருஷ்ண குபேந்திரன், விக்னேஸ்வரன் என்ற இரண்டு ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவரது உறவினரான சுரேஷ் (வயது 38) ராம்குமாரிடம் 4,70,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடன் பெற்ற தொகையை ராம்குமார் ஓர்ஆண்டாக சுரேஷிடம் திருப்பி கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சுரேஷ் மற்றும் அவரது உறவினர்களான கீதா (வயது32), விஜி என்ற விஜயராம் (வயது 32), காமாட்சி (வயது 28), மற்றும் கணேஷ்குமார் (வயது 29) ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து கடன் கொடுத்த ராம்குமார் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் பாயாசத்தில் விஷத்தை ஊற்றி கொடுத்து குடும்பத்தோடு கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அவர்களின் திட்டப்படி பாயாசத்தில் விஷத்தை ஊற்றி முதலில் ராம்குமாரின் மகளான சௌந்தர்யா என்ற 11 வயது குழந்தைக்கு கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ராம்குமார், அவரது மனைவி, செல்வி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கலந்த பாயாசத்தை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ராம்குமாரின் மனைவி செல்வி பாயாசம் குடித்த பொழுது ஒவ்வாமை ஏற்பட்டதால் கீழே துப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து பாயாசம் குடித்த நபர்கள் மயங்கி விழுந்த நிலையில், போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது ராம்குமாரின் மகள் சௌந்தர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ராம்குமாரின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் போடி டவுன் காவல் நிலையத்தில் விஷம் கொடுத்து கொலை செய்ததாக சுரேஷ் உள்ளிட்ட அவரது உறவினர்கள் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கு விசாரணையானது முடிவுற்று பாயாசத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதால் முதல் குற்றவாளியான சுரேஷுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் ஆயுள் தண்டனையும் மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு, அதைக் கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் மெய் கால் சிறை தண்டனை மற்றும் IPC-307ன் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, என மூன்று பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு விஷம் கொடுத்து கொலை செய்ய உதவிய விஜி என்ற விஜயராம் என்ற இளைஞருக்கு IPC-307ன் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால் மேலும் 6 மாத கால சிறை தண்டனையும் விதித்து மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது குற்றவாளியான கீதா மற்றும் நான்காவது குற்றவாளியான காமாட்சி ஆகிய இருவரும் உயிரிழந்து விட்ட நிலையில் ஐந்தாவது குற்றவாளியான கணேஷ் குமார் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story