காங்கிரஸ் போராட்டத்தால் ஊதியம் வழங்கல்: எம்.பி மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் போராட்டத்தால் ஊதியம் வழங்கல்: எம்.பி மாணிக்கம் தாகூர்
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் களை சந்தித்தார்.

விருதுநகரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி தமிழகத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு கடந்த 14 வாரங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதற்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டம் நடத்திய நிலையில் தற்போது மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது என செய்தி வருகிறது.

எனவே வரும் 19ம் தேதி விருதுநகருக்கு வருகை தரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவது என்பது நியாயமாக இருக்காது எனவும் 100 நாள் வேலையை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு ஊதியத்தை வழங்கிய நிர்மலா சீதாராமனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் எம்பி தமிழக ஆளுநரின் செயல்பாடு வினோதமாக இருக்கிறது எனவும் தான் வகிக்கின்ற பொறுப்பை ஒரு அரசியல்வாதியை போல் செயல்படுவதும் ஒரு கட்சிக்காரரை போல் செயல்படுவது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் என்றார். தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை தமிழக அரசு சட்டமன்றத்தில் மீண்டும் அனைத்துத் தீர்மானங்களையும் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்றார்.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு தமிழக ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அனைத்து மாநிலங்களிலும் மாநில பாஜக தலைவரை போல ஒரு ஆளுநர் நடக்கத் தொடங்கினார் என்றால் ஒன்று கவர்னர் பதவி இருக்க வேண்டும் அல்லது மாநில பாஜக தலைவர் பதவி இருக்க வேண்டும் என்றார் மேலும் தமிழகத்தில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யின் பொறுப்புகளை ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவது என்பது வினோதமாக இருக்கிறது என விமர்சனம் செய்தார்

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் எம்பி சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட பழங்குடியினர் குறித்து ஆவணப்படுத்தவதை வரவேற்கிறேன் என்றார். ஆனால் இவர்கள் ஒரு தவறான வரலாற்றை இவர்கள் கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொள்வதும் முன்பு இருக்கிற வரலாற்றை தவறு என்று சொல்வதும் பாஜகவின் சதி திட்டம் என குற்றம்சாட்டினார்.

வரலாற்றுப் பதிவுகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்துவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் வரலாற்று ஆய்வாளர்கள் பணி ஆகும் இவற்றில் ஆளுநர் தலையிடுவது என்பது நியாயமற்றது என்றார் திருச்செந்தூர் கோவிலில் தரிசன டிக்கெட்டின் விலை உயர்வை இந்து சமய அறநிலையத்துறை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் செய்யாற்றில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்டது குறித்து கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி களின் பின்புலம் என்ன அவர்கள் யாரால் இயக்கப்படுகிறார்கள் என்பதை ஆராய்ந்து தான் கருத்து சொல்ல வேண்டும் என்றார். விவசாயிகள் மீது குண்டாஸ் போடுவது என்பதை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த நடவடிக்கையும் எடுத்து இருக்காது காவல்துறை என்றார்.

மேலும் ராகுல் காந்தியின் முன்னெடுப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட நில எடுப்பு சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருந்தது எனவும் அந்த சட்டத்தை நீர்த்துப் போகும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு இருக்கிறது என குற்றம்சாட்டினார். மேலும் விவசாயிகளின் பிரச்சினையை பேசி தீர்க்க வேண்டியது அரசின் கடமை என்றார் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது மத்திய அமைச்சர் களின் நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது எனவும் தற்போது பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சி களில் எதிர்க்கட்சி எம்பிக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அதே சமயம் எதிர்கட்சி எம்பிக்களுக்கு உரிய மரியாதையும் கொடுக்கப் படுவதில்லை என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

நடைபெறும் ஐந்து மாநில தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்றார். மேலும் நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்றார். தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் எந்த கூட்டணியில் இருக்கிறார் எனவும் எந்த இடத்தில் தேர்தலில் நிற்கப் போகிறார் என்பதை முடிவு செய்ய வேண்டும் எனவும் தேமுதிக அரசியல் கட்சியாக இருந்து கம்பெனியாக மாறிவிட்டது

என விமர்சனம் செய்தார் மாணிக்கம் தாகூர். மேலும் இந்தியா கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசுவது என்பது தேவையற்றது என்றார். மேலும் பிரேமலதா விஜயகாந்த்க்கு மக்கள் பிரச்சினையும் இந்தியா கூட்டணியின் வெற்றி குறித்தும் தெரிய வாய்ப்பு இல்லை என்றார்

Tags

Next Story