இருதரப்பினருக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை

இருதரப்பினருக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை

மாயனத்திற்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்து தர இருதரப்பினருக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை தாசில்தார் தலைமையில் நடந்தது

மாயனத்திற்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்து தர இருதரப்பினருக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை தாசில்தார் தலைமையில் நடந்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வீரகனூர் அருகே லத்துவாடி மற்றும் திட்டச்சேரி பகுதிகளில் இரு தரப்பினரும் மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு தரப்பினர் மேடு பகுதியிலும், மற்றொரு தரப்பினர் கீழ்பகுதியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கீழ் பகுதியில் போதிய வசதி இல்லாததால் கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் அபாயம் நிலவியது. இதயைடுத்து, இரு தரப்பினரை அழைத்து தலைவாசல் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பில் 5 பேர் வீதம் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் வரும் 27ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தாசில்தார் தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் போது தலைவாசல் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஒ துரைசாமி, வீரகனூர் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், எஸ்எஸ்ஐ ராமர் மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

Tags

Next Story