சிதம்பரம்: அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம்

சிதம்பரம்: அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம்
X

அமைதிபபேச்சு வார்த்தை

பரங்கிபேட்டை- பொண்னந்திட்டு பாலத்தின் பழுதடைந்த இருபக்க சாலைகளுக்கு பதிலாக புதிய சாலை அமைத்து தர கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருக்கும் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை கைவிடக்கோரி அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரங்கிப்பேட்டை - பொண்னந்திட்டு பாலத்தின் இருமுனைகளிலும் குண்டு குழியுமான மரண சாலைக்கு பதிலாக புதிய சாலை அமைத்து தர கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருக்கும் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை கைவிட கேட்டு வட்டாச்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு பின்னர் சில முடிவுகள் எடுக்கப்பட்டு எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டுள்ளது.

1)வரும் 07/02/24 புதன்கிழமைக்குள் இருமுனைகளிலும் தற்காலிக சாலை பணி பேட்ச் ஒர்க் செய்வது. 2)மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழியாக சிஎஸ்ஆர் பண்ட் பெற்று சாலை பணிகளுக்காக டெண்டர் விடுவது 3) டெண்டர் விடப்பட்ட 50 நாட்களுக்குள் புதிய சாலை அமைத்து தருவது. கூட்டத்தில் பரங்கிப்பேட்டை கிள்ளை ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் இணை நிலை அதிகாரிகள், கிள்ளை காவல் உதவி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மாவட்ட குழு உறுப்பினர் பழ. வாஞ்சிநாதன் ஒன்றிய செயலாளர், வழக்கறிஞர் ஜி. ஆழ்வார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எல் சுதாகர், பி கே சுனில், மூத்த தோழர் ஜீவா, திருஞானம், முத்துக்குமாரசாமி, கிளைச் செயலாளர் வேல்முருகன், விவசாய சங்க தலைவர் தோழர் வினோபா உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் கலந்து கொண்டனர்.

Tags

Next Story