நடந்து சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு - விஏஓ புகார்.-

நடந்து சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு குறித்து விஏஓ புகார் அளித்ததை அடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட மணல்மேடு பஸ் ஸ்டாப் அருகே பிப்ரவரி 22ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் அடையாளம் தெரியாத 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் கரூர்- திண்டுக்கல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, நடந்து சென்ற நபர் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அந்த நபர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், அருகில் உள்ள தாளப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் என்பவருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்து, அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தது குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். மேலும், இது தொடர்பாக அரவக்குறிச்சியை காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த அடையாளம் தெரியாத அந்த நபரின் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில், அடையாளம் காண்பதற்காக இருப்பு வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அதிகாலையில் அந்த பகுதியை கடப்பதற்கு என்ன காரணம்? அவரது உறவினர்கள் யார்? மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்று கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story