சாலைகளில் கால்நடை திரிந்தால் அபராதம் : ஆட்சியா் எச்சரிக்கை

சாலைகளில் கால்நடை திரிந்தால் அபராதம் : ஆட்சியா் எச்சரிக்கை

மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி

சாலையில் கால்நடைகளை திரியவிட்டால் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
சாலையில் கால்நடைகளை திரியவிட்டால் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் பஞ்சாயத்து சாலைகள் ஆகியவற்றில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் கால்நடைகளை சுற்றித்திரிய விடக்கூடாது. மீறினால் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள கோசாலைகளில் ஒப்படைத்து, கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தொடா்ந்து கட்டுப்பாடின்றி கால்நடைகளை சுற்றித்திரிய விடும் உரிமையாளா்கள் மீது சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Tags

Next Story