சிவகாசியில் வரி கட்ட தவறினால் அபராதம்: ஆணையாளர் எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக பொது மக்களிடம் இருந்து சொத்து மற்றும் தொழில் வரிகள் வசூலிக்கப்படுகிறது.நடப்பு 2023-2024 நிதியாண்டு வருகின்ற மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்து,காலிமனை, தொழில்,குடிநீர் கட்டணம்,கடை வாடகை, குப்பை வரி என ஆண்டுக்கு ரூ 23 கோடியே 67 லட்சம் வருவாய் கிடைக்கும்.இந்த ஆண்டு இதுவரை ரூ 21 கோடியே 88 லட்சம் வசூலாகி உள்ளது.இதில் தொழில் வரியாக ரூ 79 லட்சம்,குடிநீர் கட்டணமாக ரூ1 கோடியே 46 லட்சமும்,
சொத்து வரி ரூ 16 கோடியே 74 லட்சமும்,காலி மனை வரி ரூ 27 லட்சமும்,கடைகள் வாடகை மூலம் ரூ 1 கோடியே 20 லட்சமும், குப்பை வரி ரூ1 கோடியே 40 லட்சமும் வசூலாகி உள்ளது. மேலும் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது,கடந்த சில ஆண்டுகளாக வசூலாகாமல் உள்ள வரிகளை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த தொகைகள் வசூலானால் மாநகராட்சிக்கு ரூ 2 கோடி கிடைக்கும்,வளர்ச்சி பணிகள் அதிகளவில் செய்ய வேண்டி இருப்பதால் பொதுமக்களும்,தொழில் அதிபர்களும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென்றார்.