குப்பைகளைக் கொட்டினால் அபராதம் - பேரூராட்சி நிர்வாகம்

குப்பைகளைக் கொட்டினால் அபராதம் - பேரூராட்சி நிர்வாகம்

ஊத்தங்கரை  பேரூராட்சி

ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்தவெளிகளில் குப்பை கழிவுகளை கொட்டுவோருக்கு 1லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் திறந்த வெளியில் குப்பைகள் மற் றும் கோழி கழிவுகள், இறைச்சி கழிவுகள் கொட்டுவது கண்டறியப்பட்டால் கொட்டும் நபர்களுக்கு ரூ.100000 வரை அபராதம் விதிக்கப்படும், மேலும் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள் வணிக வளாகங்களில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்துவது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் முதல் முறை ரூ.500, முறை ரூ.500, இரண்டாம் முறை ரூ. 1000, அபராதமும், 3வது முறை கண்டறியப்பட் டால் கடையின் உரிமம் இரத்து செய்யப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் பா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tags

Next Story