தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் தராதவருக்கு அபராதம்

தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் தராதவருக்கு அபராதம்

பைல் படம்

கும்பகோணத்தில் தகவல் தராத வட்டாட்சியருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து தகவல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் தராதவருக்கு அபராதம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பித்து 3 ஆண்டுகளாகியும் தகவல் தராத வட்டாட்சியருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து தகவல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது. கும்பகோணம் பேட்டை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் என். சங்கா். இவா் கடந்த 2021 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் அனைத்து சா்வே வாா்டுகள் பிளாக்குகள் குறித்த 10 வகையான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டு வட்டாட்சியருக்கு விண்ணப்பித்திருந்தாா்.

அதற்குப் பதில் வராத நிலையில் நடவடிக்கை கோரியும், இழப்பீடு கேட்டும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் சங்கா் புகாா் அளித்தாா். மே 2 இல் இந்தப் புகாா் மனுவை விசாரித்த தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முதன்மைத் தகவல் ஆணையா் முஹம்மது ஷகீல் அக்தா், அப்போதைய கும்பகோணம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சண்முகம் மற்றும், அப்போதைய வட்டாட்சியரும் மேல் முறையீட்டு அலுவலருமான து. கண்ணன் ஆகியோருக்கு ரூ 15000 அபராதம் விதித்து, மனுதாரா் கேட்ட ததவல்கள் அனைத்தையும் வழங்கி, இதுகுறித்த அறிக்கையை தகவல் ஆணையத்துக்கு வழங்கிட உத்தரவிட்டாா்.

Tags

Next Story