அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம்
பரமத்தி வேலூரில் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து துறையினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படியும் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலரின் அறிவுறுத் தலின்படியும் பரமத்தி வேலூர் சுற்று வட் டார பகுதிகளில் கடந்த இரு தினங்களில் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் சிறப்பு வாகனத் தணிக்கை மேற் கொண்டார். இதில் அதிகபாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து ஐந்தாயிரம் மற்றும் ஹெல் மெட் அணியாமல் இரு சக்கரம் வாகனம் ஒட்டியவர்களுக்கு அபராதமும் நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் மோட்டார் வாகனச் சட்டத்தை மீறிய 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கப்படுகிறதா என்பதும் கண்காணிக் கப்பட்டது.18 வயது நிரம்பாத சிறுவர்களுக்கு பெற்றோர்கள் வாகனத்தை ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் மீறும் சிறார்களின் பெற்றோர்களுக்கு ரூ. 23 ஆயிரம் அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தார்.