வித்யாசமான ஹெல்மெட் - அபராதம் விதித்த காவல்துறை

வித்யாசமான ஹெல்மெட் - அபராதம் விதித்த காவல்துறை

வித்யாசமான ஹெல்மெட் அணிந்தவருக்கு அபராதம் விதித்த காவல்துறை

வித்யாசமாக ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி வந்தவருக்கு அபராதம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், ஆபத்தான முறையில் பைக் ஓட்டியவா் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை அடுத்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் உத்தரவிட்டாா். கண்காணிப்பு காமிரா பதிவுகளைப் போலீஸாா் ஆய்வு செய்ததில், அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியவா் தென்காசி மலையான்தெருவை சுஜித் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த போலீஸாா், அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனா்.

Tags

Next Story