செயற்கை வண்ணம் அதிகளவில் பயன்படுத்திய கடைகளில் அபராதம்
ஜிகா்தண்டா
திண்டுக்கல்லில் ஜிகா்தண்டாவில் செயற்கை வண்ணம் அதிகளவில் பயன்படுத்திய 2 கடைகளுக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தால், குளிா்பானங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் பேகம்பூா் பகுதியில் செயல்படும் ஜிகா்தண்டா கடையில், அதிகளவில் செயற்கை வண்ணம் பயன்படுத்தப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கு புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வம் தலைமையில், முகமதியாபுரம் பகுதியிலுள்ள குளிப்பானம் விற்பனை செய்யும் இரண்டு கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஜிகா்தண்டாவில் செயற்கை வண்ணம் அதிகளவில் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 2 கடை உரிமையாளா்களுக்கும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story