70 பேருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்

70 பேருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்

70 பேருக்கு அபராதம்

பரமத்தி வேலூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 70 நபர்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா உத்தரவின் படி வேலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஷாஜகான் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் பரமத்தி வேலூர் பகுதியில் காவிரி பாலம் சோதனை சாவடி,, மோகனூர் சாலை, நான்கு சாலை, கபிலர்மலை மற்றும் பாண்டமங்கலம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த வாகன சோதனையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம், வாகன காப்பீடு இல்லாமல் வாகனங்களை இயக்கிய போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 80-க்கும் மேற்பட்டோருக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு வாகனங்கள் இயக்க அனுமதி அளிக்கக்கூடாது எனவும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் வாகன ஒட்டிகளுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story