கால தாமதமாக விநியோகம் செய்து வந்த ஏஜென்சி உரிமையாளருக்கு அபராதம்

கால தாமதமாக விநியோகம் செய்து வந்த ஏஜென்சி உரிமையாளருக்கு அபராதம்

நுகர்வோர் நீதிமன்றம் 

கூடுதலாக பணம் கேட்டு கேஸ் சிலிண்டரை கால தாமதமாக விநியோகம் செய்து வந்த ஏஜென்சி உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சித்தோட்டைச் சேர்ந்தவர் மணிகண்ணன் இவர் கடந்த 2021ம் ஆண்டு தனது பயன்பாட்டிற்காக சித்தோட்டில் உள்ள புகழ் இண்டேன் கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்துள்ளார்.அப்போது விநியோகம் செய்த பணியாளர் 50 முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக கேட்டுள்ளார்‌.

இதனை கொடுக்க மறுத்த மணிகண்ணனுக்கு காலதாமதமாக சிலிண்டரை ஏஜென்சி விநியோகம் செய்து வந்துள்ளது. இதுகுறித்து மணிகண்ணன் ஏஜென்சி மற்றும் மண்டல அலுவலகத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனையடுத்து மணிகண்ணன் கடந்த மே மாதம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார்.இதன் விசாரணையில் புகார் நிரூபிக்கப்பட்டதை அடுத்து புகழ் இண்டேன் கேஸ் ஏஜென்சி இழப்பீடாக மணிகண்ணனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கவும் ஐந்தாயிரம் ரூபாய் வழக்கு செலவிற்கு தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story