பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ

பென்னாகரம் சட்டமன்ற பகுதிகளில் பொதுமக்களை சந்தித்த எம்.எல்.ஏ ஜி.கே மணி அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் வட்டம் ஏர்கோல்பட்டி கிராமப் பகுதிகளில் இன்று காலை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி நேரில் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் அடிப்படை தேவைகளான கழிவுநீர் கால்வாய் வசதி மற்றும் போதுமான குடிநீர் வசதி இல்லை என முறையிட்டனர் மேலும் ஒரு சில இடங்களில் பகுதி நேர நியாய விலைக் கடைகள் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி துறை சார்ந்த அலுவலர்களிடம் உடனடியாக தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார் மேலும் கழிவு நீர் கால்வாய் மற்றும் பகுதியில நியாய விலை கடை விரைவில் அமைதி தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்தார் இன நிகழ்வில் பாமக நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story