கோரிக்கை நிறைவேற்றுக் கோரி பென்னாகரம் எம்எல்ஏ அறிக்கை

கோரிக்கை நிறைவேற்றுக் கோரி பென்னாகரம் எம்எல்ஏ அறிக்கை

பாமக எம்எல்ஏ

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு கடுமையான வெயில் காலத்தைக் குறித்து பென்னாகரம் எம்எல்ஏ ஜிகே மணி வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணிMLA வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் திருவண்ணாமலையில் பெளர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக மிக அதிகரித்து வருகிறது.

அதன் அடிப்படையில் வருகின்ற சித்ரா பெளர்ணமி 23.4.2024செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 4.16மணிக்கு முதல் அடுத்த நாள் 24.4.2024 புதன்கிழமை அதிகாலை 5.47மணி வரை உள்ளதால் சித்ரா பௌர்ணமிக்கு கூட்டம் அலைமோதும். தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களில் இருந்தும்,

பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பௌர்ணமி நாட்களில் வருகை அதிகரித்து வருவது அறிந்ததே. தற்போது கடுமையான வறட்சியும் சுட்டெரிக்கும் வெயில் நிலவுவதால் கோவில் நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறையும் காவல்துறையும் முன்னேற்பாடு நடவடிக்கைகளிலும், பாதுகாப்பு நடவடிக்கைகளிலும், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும்விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இது திருவண்ணாமலை மாவட்ட மக்களின் கோரிக்கையாகவும் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் கோரிக்கையாகவும் செய்தி வந்துள்ளது. இதை முறையாக விரைந்து நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story