ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சியர் 

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.01.2024 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மற்றும் இயக்குநர் /ஓய்வூதிய இயக்குநரகம் சென்னை அவர்கள் தலைமையில் மற்றும் பெரம்பலூர், மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் முன்னிலையில் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 10.01.2024 அன்று காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது.

ஆகவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று கரூவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அது குறித்த மனுக்களை இரண்டு பிரதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் 05.01.2024-க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

மேலும், 10.01.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story