சங்கராபுரத்தில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்

சங்கராபுரத்தில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்

ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்

சங்கராபுரத்தில் ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சங்கராபுரத்தில் ஓய்வூதியர் சங்க சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தலைவர் கலியமுர்த்தி தலைமை தாங்கினார். செயல் தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். ராமகிருஷ்ணன், செல்வராஜன், கிருஷ்ணமூர்த்தி பேசினர். சங்க நிர்வாக குழுவில் காலியான அவைத் தலைவர், தணிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தணிக்கையாளர்களாக லெனின், சீனுவாசன், அவைத் தலைவராக வினயத்தான் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிம், பால்ராஜ், ரகுநந்தன், வேல்முருகன், குணசேகரன், அன்பழகன், அண்ணாமலை மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story