ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஓய்வூதியர் தினவிழா மற்றும் கருத்தரங்கு
நாமக்கல்லில் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஓய்வூதியர் தினவிழா மற்றும் கருத்தரங்கு
நாமக்கல்லில் நடைபெற்ற ஓய்வூதியர்கள் தின விழாவில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. 70 வயதுக்கு மேல் ஆன ஓய்வு பெற்றவர்களுக்கு, கூடுதல் பென்சன் வழங்க வேண்டும் என்று ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், ஓய்வூதியர் தின விழா மற்றும் கருத்தரங்கு, நாமக்கல்லில் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் குப்புசாமி வரவேற்றார். மாநில செயலாளர் மகேஸ்வரி விழாவை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட உதவித்தலைவர் மணி, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல அமைப்பு மண்டல தலைவர் பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் ராகவேந்திரன் சிறப்பு விருந்தனராக பங்கேற்று பேசினார். தொடர்ந்து, புதிய பென்சன் திட்டத்ததை ரத்து செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும். 65 வயது முதல் மற்றும் 70 வயது முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். எட்டாவது ஓய்வூதியக்குழு அமைக்க வேண்டும். மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் திட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட ஓய்வு பெற்றோர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து திரளான ஓய்வூதியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்