குமரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கை முழக்கங்கள் எழுப்பட்டன
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியரின் ஓய்வூதியத்தை 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்பு ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 7850 வழங்க வேண்டும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தினை காசில்லா சிகிச்சை தடையின்றி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story