குடிநீரால் மக்கள் பாதிக்கப்பட்ட வையாவூரில் எம்.பி, எம். எல். ஏ. ஆய்வு

வையாயூரில் ஊராட்சியில் குடிநீருடன் மழை நீரும் கலந்த விவகாரம் எம் பி, எம் எல் ஏ ஆய்வு
காஞ்சிபுரம் அருகே வையாயூரில் ஊராட்சியில் குடிநீருடன் மழை நீரும் கலந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வாந்தி,வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர் இது குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஏழிலரசன் ஆகியோர் நேரில் சென்று அப்பகுதி மக்களும் ஆறுதல் கூறினார்கள். பின்னர் குடிநீர் கிணறு மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் போடப்பட்டுள்ள மருத்துவ முகாமினையும் பார்வையிட்டு போதிய மருந்து அளிக்கவும் , குடிநீரில் குளோரின் பவுடர் போடப்பட்டுள்ளதா ? தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதா ? என கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:- வையாயூர் ஊராட்சியில் ஒரு சில பேருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி தலைமையிலும், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தலைமையிலும் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு சிறப்பு முகாம் மூலம் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வையாவூர் பகுதி முழுவதும் ஓ ஆர் எஸ் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடாக சென்று அனைவருக்கும் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக குடிநீருடன் மழை நீர் கலந்துள்ளது .இதனால் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வையாவூர் பகுதி மக்கள் முழுவதும் காய்ச்சிய குடிநீரை வடிகட்டி குடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாத நிலை உருவாகும் வகையில் இங்கு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story