அதிவேகத்துடன் செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம்
தென்காசியில் அதிவேகத்துடன் குற்றாலம் சாலையில் செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலம் செல்லும் சாலை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் கனிமங்கள் ஏற்றிச் செல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விபத்தில் கனிமவள ஏற்ற சென்ற வாகனம் மோதி மூன்று பேர் பலியான நிலையில் குற்றாலம் சாலையில் வாகனங்கள் வேகம் குறையாமல் சென்று வருவதால் பொதுமக்கள் அச்சம். அந்தப் பகுதியில் வரும் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
Next Story