ஏற்காட்டில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டெருமை மக்கள் அச்சம் !

ஏற்காட்டில் ஊருக்குள் புகுந்து  அட்டகாசம் செய்த காட்டெருமை மக்கள் அச்சம் !

ஏற்காட்டில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டெருமை

ஏற்காட்டில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டெருமை தாக்கியதில் இரண்டு பேர் படுகாயம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தினமும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்காடு தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு உள்ளதால் மலைப்பகுதியில் காட்டெருமைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அந்த காட்டெருமைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை ஏற்காடு மையப்பகுதியில் உள்ள அரசு ரோஜா தோட்டத்தில் காட்டெருமை ஒன்று புகுந்து புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. ஏற்காடு கீழ் கிளியூர் கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன், கடந்த சில ஆண்டுகளாக ரோஜா தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை 9 மணியளவில் வழக்கம்போல் ரோஜா தோட்டத்தில் வேலை செய்வதற்காக வந்தார். அப்போது, அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை அவரை தாக்கியது. இதில், படுகாயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, அந்த காட்டெருமை மக்கள் அதிகமாக உள்ள ஜெரினாகாடு பகுதியில் நுழைந்தது. அங்கு சாலையில் நடந்து சென்ற பழனி என்பவரை துரத்தி முட்டியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் காட்டெருமையை ஊர்மக்கள் ஒன்று கூடி காட்டுக்குள் விரட்டினர். ஏற்காடு காட்டுப்பகுதிக்குள் விரட்டப்பட்ட காட்டெருமைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே, வனப்பகுதியில் இருந்து காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்துவிடாமல் இருக்கவும், ரோஜா தோட்டத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story