திருச்செங்கோட்டில் திடீர் மழை பெய்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி
திருச்செங்கோட்டில் திடீர் மழை பெய்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்செங்கோட்டில் திடீர் மழை பெய்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொல்லப்பட்டி, தோக்கவாடி, கூட்டப்பள்ளி, நெசவாளர் காலனி, கைலாசம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 45 நிமிடங்கள் வெளுத்து வாங்கிய கனமழை கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. கடந்த ஒரு மாத காலமாககடும் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் ,ஈரோடு சேலம், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த போதும் திருச்செங்கோட்டில் மழை பெய்யவில்லை என பொதுமக்கள் ஏங்கி வந்த நிலையில்சித்திரை மாதம் முடிந்து வைகாசி தொடங்கிய முதல் நாள் வைகாசி விசாக தேர் திருவிழா கொடியேற்றம் நடந்த நாளில் மாலை சுமார் 3.45 மணிக்கு திடீரென வானம் கரும் மேகங்களால் சூழப்பட்டது. லேசான காற்றுடன் பெய்ய தொடங்கிய மழை, கன மழையாக மாறி சுமார் 45 நிமிடம் கொட்டி தீர்த்தது. வறட்சியான நிலையில் இருந்து குளுமையான நிலைக்கு மாறி இருப்பதால் பொதுமக்கள் பெய்த மழையை வரவேற்றதோடு மகிழ்ச்சி தெரிவித்தனர். இதே போல் இன்னும் இரண்டு நாட்கள் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பஞ்சம் இருக்காது எனவும் தெரிவித்தனர். மழைக்காக மக்கள் ஏங்கி வந்த நிலையில் பெய்த இந்த மழை பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Next Story