அதிகரித்துள்ள நீர்வரத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி

அதிகரித்துள்ள நீர்வரத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி

பழனி நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோடைகால நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பழனி நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோடைகால நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. பழனி நகருக்கு மட்டுமல்லாது பழனி கோயிலுக்கு நாள் தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் குடிநீர் ஆதாரமாக பழனி நகராட்சி கோடைகால நீர்த்தேக்கம் உள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் தாக்கம் அதிகமானதால் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் அளவு குறைந்து வந்ததால் குடிநீர் தட்டுப்பாடு நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக பழனிப்பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக பழனி நகராட்சி கோடைகால நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது ‌‌. இதனால் 15 அடி கொள்ளளவு கொண்ட நீர் தேக்கத்திற்கு தற்போது 10 அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோடைகால நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை ஓரிரு தினங்களில் எட்டி விடும் என்பதால் பழனி நகரின் 33 வார்டுகளுக்கும் நாள்தோறும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும்.

Tags

Next Story