முக்கிய சாலையில் விழுந்த வழிகாட்டி பலகை பல மாதங்களாக அகற்றப்படாத அவலம்

முக்கிய சாலையில் விழுந்த வழிகாட்டி பலகை பல மாதங்களாக அகற்றப்படாத அவலம்
சாலையில் விழுந்த வழிகாட்டி பலகை பல மாதங்களாக அகற்றப்படாத அவலம்
சாலையில் விழுந்த இரும்பு தூண் அகற்றபடாததால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலையில், தினமும் 40,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் முக்கிய பகுதிகளில், நெடுஞ்சாலை துறை சார்பில், வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதில், பெரியார் நகர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த வழிகாட்டி பலகை, கடந்த செப்டம்பர் மாதம் பெய்த பலத்த மழையில், இரும்பு துாணுடன் சாலையில் முறிந்து விழுந்தது. இந்த இரும்பு துாண், மூன்று மாதங்கள் கடந்தும் அகற்றப்படாமல் சாலையிலேயே உள்ளது. இதனால், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள், அதில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், இந்த துாண்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Tags

Next Story