சாலையில் வழிந்தோடும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதி
வழிந்தோடும் சாக்கடை நீர்
மருத்துவமனை வளாகத்தில் வழிந்தோடும் சாக்கடை நீரால் மக்கள் அவதி - நிரந்த தீர்வு காண கோரிக்கை
கோவை மருத்துவமனை வளாகத்தில் வழிந்தோடும் சாக்கடை நீரை சுத்தம் செய்து நிரந்த தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.மருத்துவமனையில் ஏராளமான உள்நோயாளிகள் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை வளாகத்தில் அவ்வப்போது சாக்கடை நீர் பெருக்கெடுத்து செல்வதும் மாநகராட்சி ஊழியர்கள் இதனை சரி செய்வதும் தொடர் கதையாகி விட்டது. இந்நிலையில் மருத்துவமனை வலது புறம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செல்லும் சாலையில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். இதன் அருகிலேயே உள்ள தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வரும் நிலையில் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மாநகராட்சி இதற்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story