திருமணிமுத்தாற்றில் சாக்கடை கழிவால் மக்கள் அவதி

திருமணிமுத்தாற்றில் சாக்கடை கழிவால் மக்கள் அவதி

திருமணி முத்தாற்றில் சாக்கடை கலந்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருமணி முத்தாற்றில் சாக்கடை கலந்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருமணிமுத்தாற்றில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால், மல்லசமுத்திரம் சின்னஏரி மற்றும் பெரியஏரிகளுக்கு தண்ணீரை நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம், ஆட்டையாம்பட்டி, மாமுண்டி, ஆத்துமேடு, மாரம்பாளையம், இலுப்புலி, மாணிக்கம்பாளையம் வழியாக சென்று இறுதியாக பரமத்திவேலூர் காவிரியாற்றில் கலக்கின்றது. தற்சமயம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதில், சாக்கடை கழிவுநீர் மற்றும் சாயக்கழிவுநீர் கலப்பதினால் கடும் துர்நாற்றம் வீசிவருகின்றது. தண்ணீரின் தன்மைமாறி கருப்பு நிறத்தல் வந்துகொண்டுள்ளது. இதனால், பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாது, சுற்றியுள்ள விவசாய கிணறுகள் மற்றும் போர்வெல்களில் தண்ணீரின் தன்மைமாறி விசத்தன்மை வாய்ந்தாக உள்ளது. எனவே, மாமுண்டி திருமணிமுத்தாற்றில் இருந்து பிரிந்து, வாய்க்கால் வழியாக மல்லசமுத்திரம் சின்னஏரி மற்றும் பெரியஏரிக்கு தண்ணீரை சிறிது காலத்திற்கு நிறுத்த வேண்டும் என மல்லசமுத்திரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story