சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகள் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!
கால்நடைகள்
மணமேல்குடி நகரில் கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது. சென்னை, மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன மணமேல்குடியில் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை மின்வாரிய அலுவலகம் என்ற பல்வேறு அரசு அலுவலகங்கள் வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1000 மேற்பட்டோர் வந்து செல்கின்றன.
இந்நிலையில் நகரின் முக்கியசாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் அவ்வப்போது கால்நடைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது உடன் நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர் இரவு நேரங்களில் சாலையில் குறுக்கே ஓடும் கால்நடைகளால் இருசக்கர வாகனம் ஓட்டுநர்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது. இது தவிர பள்ளிக்கு சைக்கிளில் வரும் மாணவிகளும் விபத்தில் சீக்குகின்றன. இந்த கால்நடைகள் சாலையோரம் காய்கறி மற்றும் பழக்கடைகளில் இருந்து பழங்களை சாப்பிட்டு விடுவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளை ஊராட்சி நிர்வாகம் பிடித்து கொட்டகையில் அடைத்து வைத்து அவற்றின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்து விடுவிப்பது வழக்கமாக இருந்தது இப்போது அந்த நடைமுறை இல்லாததால் கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.