பர்கூர் அருகே மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
அதிகாரிகளிடம் வாக்குவாதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளி கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணன் பெருமாள் கோவில் மற்றும் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை கிராம மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.
இந்த கோவிலுக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் இருந்த நிலையில் 1959 ஆம் ஆண்டு கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தனி நபர் பெயரில் பட்டா மாற்றம் செய்து அதனை அவர்கள் குடும்பத்தாருக்கு இடையே பத்திரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும் என கிராம மக்கள் இந்து அறநிலைத்துறை மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்துள்ளனர் மனு அளித்த நிலையில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் இன்று மீர் அக்தர் அலி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலம் அளவீடு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ள நீதிமன்ற ஆணை பெற்று வந்துள்ளனர்.
இதில் கிராம மக்கள் கொடுத்த மனுவின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் ஆக்கிரமிப்பு நபருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் அளவீடு பணிகள் நிறுத்தப்பட்டு சென்றனர் இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.