உதயநிதி நிகழ்வில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

உதயநிதி நிகழ்வில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

வாக்கு வாதம் 

வாக்குறுதி அளித்தபடி பட்டா மற்றும் வீட்டின் சாவி வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த காரமடை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை:சரவணம்பட்டி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்ததுடன் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய நிலையில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் பணம் செலுத்தியவர்களுக்கு பட்டா மற்றும் வீட்டின் சாவி ஆகியவை அமைச்சர் கையால் வழங்கப்படும் எனக் கூறி மேட்டுப்பாளையம் காரமடை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவர்களுக்கு பட்டா மற்றும் சாவி ஆகியவை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அழைத்து வரும்பொழுது வாக்குறுதி கொடுத்து அழைத்து வந்த அதிகாரிகள் நிகழ்ச்சி முடிந்த பிறகு தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று அங்கிருந்து புறப்பட்டு விட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story