கேரளா சென்ற லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்.

கேரளா சென்ற லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்.

மக்கள்

குலசேகரத்தில் கேரளாவிற்கு கனிம வளம் கொண்டு சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கனிம வளம் கொண்டு செல்லப்படுகிறது.

கனிம வளம் கொண்டு செல்ல அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது அரசு விதிமுறைகளை மீறி கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளை பறிமுதல் செய்ய சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில் கேரளவிற்கு கடிதம் கொண்டு செல்வதை தடை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இரவு கனிம வளம் ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு லாரி வண்டி சென்று கொண்டிருந்தது குலசேகரம் வழியாக சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகன ஓட்டிகளையும் பொது மக்களையும் அச்சுறுத்தியவாறு சென்றது. இதைத் தொடர்ந்து அந்த லாரியை பொதுமக்கள் துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர் அப்போது ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

அங்கு திரண்ட பொதுமக்கள் குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் பொதுமக்கள் லாரியை சிறைபிடித்ததுடன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் குடிபோதையில் இருந்த ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இரவு நேரத்தில் குடிபோதையில் கனிம வள லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுனரால் குலசேகரன் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story