பஞ்சாயத்து அலுவலகத்தை தேசியக் கொடியுடன் பொதுமக்கள் முற்றுகை

கூனவேலம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை தேசியக் கொடியுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் கூனவேலம்பட்டி பஞ்சாயத்து கோணமேட்டில் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமைத்து வீடு மற்றும் கடைகள் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தனிநபரிடம் இருந்து வருவாய் கோட்டாட்சியர் ரூ. 2 லட்சம், தலைவர் 2 லட்சம், பஞ்சாயத்து கிளார்க் 1 லட்சம், புரோக்கர் 1 லட்சம் என மொத்தம் 6 லட்சம் பெற்றுக் கொண்டு அவருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும், அதேபகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரை இறந்து விட்டதாக சான்றிதழ் வழங்கி, அவருக்கு சொந்தமான நிலத்தை கிரையம் செய்து போலி ஆவணங்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த முறைக்கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கூனவேலம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை ஒரு சமூதாய பொது மக்கள் தேசியக்கொடியுடன் முற்றுகையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story