குடிநீர் வராததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ....

குடிநீர் வராததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ....

பேட்டி

ஆலங்குடியில் குடிநீர் வராததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை.தண்ணீர் பஞ்சம் என கூறியும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கே .வி. கோட்டை கிராமத்தில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி, தண்ணீர் பஞ்சம் என கூறியும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்ய நாதன் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே.வி கோட்டை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .இவர்கள் அனைவரும் கூலி வேலை பார்க்கும் தொழிலாளிகளாக உள்ளனர். கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் வசிக்கும் இந்த பகுதியில் கடந்த ஓராண்டாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தாசில்தார் BDO உள்ளிட்ட அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்தவித பலனும் ஏற்படவில்லை, ஒப்புதலுக்கு இன்று செல்லுங்கள் நாளை தண்ணீர் தர ஏற்பாடு செய்கிறோம் என கூறினார்கள். தவிர அதன் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை, இந்நிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய நாதனின் சொந்த தொகுதியான ஆலங்குடி தொகுதியில் கே. ‌வி. கோட்டை மட்டுமல்லாது கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவரிடம் தெரிவித்து மனு அளித்த பின்னர் அவர் அதைப்பற்றி எவ்வித மான நடவடிக்கையும் எடுக்கவில்லை கண்டு கொள்ளும இல்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் ஒரே ஏரியாவில் சொந்த பந்தத்திற்குள் அடிக்கடி தகராறு வருகிறது என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சாலை மறியல் செய்தோம் அப்பொழுது வந்த அரசு அதிகாரிகள் உங்களுக்கு நிச்சயம் இரண்டு நாளில் தண்ணீர் வழங்குவோம்.

இன்று காலை 10 மணிக்கு தண்ணீர் வழங்கப்படும் என நம்பிக்கையுடன் தெரிவித்து சென்றனர் ஆனால் வழக்கம்போல் அவர்கள் எவ்வித நடவடிக்கை முடிக்கவில்லை இதனை அடுத்து பத்துக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகள் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகிட முகுந்தனர் உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் இன்று ஆட்சியை சந்திக்க முடியாது தேர்தல் வீதிகள் அவலில் உள்ளதால் உங்கள் மனுக்களை அங்குள்ள பெட்டியில் போட்டு செல்லுங்கள் நாங்கள் அதனை ஆட்சித் தலைவருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கிறோம் என கூறி உள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மகேஸ்வரி கூறியதில் நாங்கள் இதுவரை யார் யாரிடம் மனு கொடுக்க வேண்டுமோ அனைவரும் கொடுத்து விட்டோம் அமைச்சர் மய்யாயிரம் கொடுத்துவிட்டோம். ஆனால் இதுவரை யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை கடைசியாக ஆட்சியரை பார்க்க வந்தோம் அங்கு தேர்தல் விதி இருப்பதால் அவரை பார்க்க முடியாது என கூறிவிட்டார்கள் ஆகவே இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பேட்டி: மகேஸ்வரி கே .வி. கோட்டை கிராம பொதுமக்கள்.

Tags

Next Story