ஏப்பாக்கத்தில் மாரியம்மன் கோவிலில் அதிகாரியை மக்கள் முற்றுகை
முற்றுகையிட்ட மக்கள்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப் பாட்டில் தற்போது உள்ளது. இந்த கோவிலை அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பணம் வசூல் செய்து கட்டியதாக கூறப்படுகிறது.
கோவில் தொடர்பாக ஏப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபுவுக்கும், கோவில் பகுதியை சேர்ந்த மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே கோவில் உண்டி யலில் இருந்த பணத்தை எடுத்துச்சென்று, அதனை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரியிடம் ஊராட்சி மன்ற தலைவர் ஒப்ப டைத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தினேஷ் என்பவர் கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் அங்கு வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் பக் தர்கள் நன்கொடை செலுத்தும் வகையில் கியூ. ஆர். கோர்டு வைத்ததாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தினேசை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், கோவிலில் கியூ.ஆர். கோர்டு வைப்பது தொடர்பாக நாங்கள் கலந்து பேசி முடிவு சொல் கிறோம். அதன்பிறகு அதனை வைக்கலாம் என கூறினர்.
இது குறித்த தகவலின் பேரில் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.