ஓமலூர் அருகே குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சாலை மறியல்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டத்தெரு காலனியில் சுமார் 500குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என குற்றம் சாட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பொட்டியபுரத்திலிருந்து சந்தைப்பேட்டை செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags
Next Story