ஊத்தங்கரை அருகே ஏரி வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

ஊத்தங்கரை அருகே ஏரி வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

ஊத்தங்கரை அருகே ஏரி வேலை கேட்டு சாலை மறியல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தில் முறையாக ஏறி வேலை வழங்கப்படுவதில்லை என்று கூறி ஊத்தங்கரை தர்மபுரி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் நூறு நாட்களுக்கு மட்டுமே பணித்தள பொறுப்பாளர் நியமிக்கப்படுவதாகவும் 100 நாள் கடந்தும் பணித்தள பொறுப்பாளர் நியமிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கால தாமதம் செய்த காரணத்தினால் இன்று சாலை மறியல் நடந்ததாக தெரிய வருகிறது இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது பின்னர் காலதாமதமாக வந்து ஊத்தங்கரை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் ஓவர்சில் கண்ணன் ஆகியோர் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 100 நாட்களுக்கு ஒரு முறை காலதாமதம் செய்யாமல் பணித்தள பொறுப்பாளர்கள் மாற்றுவதாக உறுதி அளித்ததன் பெயரில் மீண்டும் வேலை வழங்குவதாக உத்தரவாதம் அளித்து சென்றார்.

Tags

Next Story