குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!
சாலை மறியல்
புதுக்கோட்டை அருகே வலியம்பட்டி கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்கப்படாதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையான இச்சடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அருகே முள்ளூர் பஞ்சாயத்துக் கு உட்பட்ட வலியம்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக முள்ளூர் பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை மனு கொடுத்தும் நேரில் சந்தித்து குடிநீர் வசதி செய்து தரக்கோரி மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மேலும் மாவட்ட ஆட்சியரிடமும் இது தொடர்பாக மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குடிநீருக்காக சாலையைக் கடந்து அருகே உள்ள பஞ்சாயத்து கிராமத்தில் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பொழுது சாலையை கடக்கும் பொழுது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் கிராமத்தில் உள்ள அடி பைப்பும் பழுதாகி விட்டதால் மேலும் தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருவதாகவும் இதை சரி செய்து தரக்கோரி பஞ்சாயத்து தலைவரிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை ஆன இச்சடியில் 20க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த போக்குவரத்து பாதிப்பால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையில் காத்து நின்றன.
இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த கணேஷ் நகர் காவல் துறையினர் மற்றும் முள்ளூர் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 20 நாட்களுக்குள் குடிநீர் தொட்டி புதிதாக கட்டித் தருவதாகவும் பழுதாகியுள்ள அடி பைப்பும் சரி செய்து தருவதாக கூறியதை அடுத்து கலந்து சென்றனர். இதனால் அறை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.