கண்மாய் தடுப்பணையை தாண்டி துள்ளி குதித்த மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்
அத்திகுளம் பகுதியில் நிறைந்து காணப்படும் கண்மாய் தடுப்பணையை தாண்டி துள்ளி குதித்த மீன்களை மக்கள் அள்ளிச்சென்றனர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திகுளம் பகுதியில் நிறைந்து காணப்படும் கண்மாய் தடுப்பணையை தாண்டி துள்ளி குதித்த மீன்களை மக்கள் அள்ளிச்சென்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகள் நீரோடைகள் மற்றும் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய்கள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து அதன் காரணமாக செண்பகத்தோப்பு, அத்தி கோவில், பிளவக்கல்அணை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம், தெய்வேந்திரி கண்மாய் நிரம்பி அதன் தடுப்பணையை தாண்டி அதில் உள்ள மீன்கள் வெளியே துள்ளி குதித்து வருகிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து மகிழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story