மார்ச் 9-ந் தேதி சேலம் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம்

மார்ச் 9-ந் தேதி சேலம் கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம்

மக்கள் நீதிமன்றம்

சேலத்தில் வருகின்ற மார்ச் 9ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டிலும், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு கோர்ட்டிலும் 2024-ம் ஆண்டுக்கான முதல் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற மார்ச் மாதம் 9-ந் தேதி நடக்கிறது. மக்கள் நீதிமன்றத்தின் முக்கிய நோக்கமானது, கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளையும், நீதிமன்ற முன் வழக்குகளையும் விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு கண்டு மக்களுக்கு நீதி செய்வதாகும். மேலும், மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது.

குற்றவியல் வழக்கு, காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மார்ச் மாதம் 9-ந் தேதி நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காணலாம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story